மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஜெ.பிறந்தநாள் விழா: சிதம்பரம் மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில்

News image
Updated On :25 பிப்ரவரி 2013, 9:12 am

G.Sundararaj

முதல்வர் ஜெயலலிதா 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில்  நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் கே.ஏ.கே.முகில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 6 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் மதிப்பிலான மோதிரத்தை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட மீனவரணி செயலாளர் பாலுபச்சையப்பன், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.