தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின், விருதுநகர் கிழக்கு மாவட்டக் கூட்டம் ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை வரவேற்றார். மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி புதிய பென்சன் திட்டத்தால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து பேசினார். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கல்யாணி சிறப்புரையாற்றினர்.
மாவட்டச் செயலர் திருவண்ணாமலை சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும். கம்யூட்டேஷன் தொகை பிடித்தம் செய்வதை, 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு பழைய முறையிலேயே பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உறுப்பினர் செல்லையா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

