தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருந்திய நெல் சாகுபடி வயல் விழா

விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க பயிற்சி மையத்தின் சார்பில் திருந்திய நெல் சாகுபடி வயல் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:13 pm

தினமணி

விருதுநகர் அருகே செங்குன்றாபுரத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க பயிற்சி மையத்தின் சார்பில் திருந்திய நெல் சாகுபடி வயல் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

    செங்குன்றாபுரம் கிராமத்தில் விவசாயி சுப்புராஜின் வயலில் நடந்த திருந்திய நெல் சாகுபடிக்கான வயல் தின விழாவுக்கு வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா தலைமை வகித்தார். விருதுநகர் வேளாண்மை வட்டார விரிவாக்க மையத்தின் உதவி இயக்குநர் ஜெ. கல்யாணசுந்தரி வரவேற்றார்.

   இதில், வேளாண்மை துணை இயக்குநர் செண்பகராஜன் சாகுபடி செய்வதற்கான தொழிற்நுட்பங்கள் குறித்தும், திருந்திய நெல் சாகுபடி முறையில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிகளவு லாபம் பெறலாம்.

    எனவே இதே வருங்காலத்தில் விவசாயிகள் அனைவரும் இம்முறையைப் பயன்படுத்தி சாகுபடி அதிகம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதனால், மின்சிக்கனம், களையெடுப்பு உள்ளிட்ட செலவும் குறைவாக இருப்பதாக விளக்கிக் கூறினார். மேலும், 1 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு 40 குவின்டால் வரையில் எளிதாக மகசூல் பெற முடியும் எனக் குறிப்பிட்டார்.

   நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகதாஸ், வேளாண்மை துணை இயக்குநர் கனகராஜ், வேளாண்மை துணை இயக்குநர் வன்னியராஜன் உள்ளிட்டோர் சாகுபடி தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தனர்.

  விருதுநகர் வட்டார தொழில் நுட்ப மேலாளர் எஸ். கீதா வயல் விளக்கப் பயிற்சி அளித்தார். வேளாண்மை அலுவலர் க. மூர்த்தி நன்றி கூறினார்.

  இதில் விவசாயிகள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விருதுநகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.