காரியாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராம ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். பொருள்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி கூட்டுறவு பண்டகசாலை கட்டுப்பாட்டில், சுற்றுப் பகுதிகளில், 10-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இதில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.
விலை இல்லா அரிசி மற்றும் பருப்பு, பாமாயில் போன்ற பொருள்கள் பிரச்னையின்றி கிடைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக, பருப்பு, பாமாயில் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
கிராமங்களில் உள்ள விவசாயக் கூலி தொழிலாளர்கள், அதிக விலை கொடுத்து, வெளி மார்க்கெட்டில் பருப்பு, பாமாயில் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடைகளில் விற்பனையாளர்கள், ஸ்டாக் இல்லை, நாளை, இருநாள் கழித்து என, குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பதால், தகராறு ஏற்படுகிறது.
இதுபற்றி ரேஷன் கடை விற்பனையாளர் கூறியதாவது: 1200 கார்டுகள் உள்ள கடைக்கு, 300 குடும்பங்களுக்கான பருப்பு, பாமாயில் ஒதுக்கீடு செய்து வழங்குகின்றனர்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், சப்ளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
எனவே ஒதுக்கீட்டை அதிகரித்து, எல்லா குடும்ப அட்டைகளுக்கும், ரேஷன் பொருள்கள் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

