ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

காரியாபட்டி-முக்குளம் சாலையை இருவழிச் சாலையாக்க பொதுமக்கள் கோரிக்கை

காரியாபட்டி - முக்குளம் ரோட்டை இருவழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On :8 ஜனவரி 2013, 8:45 pm

காரியாபட்டி - முக்குளம் ரோட்டை இருவழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான திருச்சுழி பகுதியில் எல்லா வளங்களும் இருந்தும் அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாததால் தொழிற்சாலைகள் துவக்க யாரும் முன்வரவில்லை.

   காரியாபட்டியிலிருந்து மீனாட்சிபுரம், முஷ்டக்குறிச்சி, திம்மாபுரம், தொட்டியங்குளம் வழியாக முக்குளத்துக்கு 25 கி.மீ., தூரம் உள்ளது.

 ஆங்காங்கே கொண்டை ஊசி வளைவுகள், மழை நேரத்தில் ரோட்டை விட்டு வாகனங்களை கீழே இறக்க முடியாத நிலையில் குண்டும் குழியுமாக, சாலை மிக மோசமாக உள்ளது.

   ஒரு வழிச்சாலையான இதனை அவ்வப்போது சீரமைப்பதும், ஒரு சில மாதங்களிலே பெயர்ந்து ரோடு காணாமல் போவதும் தொடர்கதையாக உள்ளது. முக்குளம் வழியாகச் சென்றால் திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட ஊர்களுக்கு எளிதில் செல்ல முடியும்.

   காரியாபட்டி - முக்குளம் ரோட்டை இருவழிச் சாலையாக மாற்றினால் பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவதோடு, இரண்டு மாவட்டங்களை இணைத்து, பல்வேறு ஊர்களுக்கு சிரமமின்றி எளிதில் செல்ல முடியும்.

   மேலும் பல்வேறு தொழிற்சாலைகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.  எனவே, காரியாபட்டி-முக்குளம் ரோட்டை இருவழிச் சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.