விருதுநகர் மாவட்டம் ரோசல்பட்டி தங்கமணி காலனி இளைஞரணியின் 5-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பெண்களுக்கு கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைக்கும் போட்டி, சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை தங்கமணி காலனி கலையரங்கத்தில் நடைபெற்றது(படம்). வெற்றி பெற்றவர்களுக்கு வில்லிபத்திரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.டி. பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பேசினார்.
முதியோர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை சதீஸ்சுந்தர் வழங்கினார். ரோசல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கமாரியப்பன், முன்னாள் வார்டு உறுப்பினர் முத்து, ரவிக்குமார், ஜஸ்டின் பிரபாகரன், கிருஷ்ணகுமார், கணேசன், திருப்பதி, ஜெய்சிங் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தங்கமணி காலனி இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

