விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் சார்பில் நடைபெற இருக்கிற இன்ஸ்பையர் அறிவியல் பயிற்சி முகாமிற்கு 11-வது வகுப்பு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து செந்திக்குமார நாடார் கல்லூரியின் முதல்வர் பி.சுந்தரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இன்ஸ்பையர் என்னும் அறிவியல் பயிற்சி முகாம் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் ஆக-16ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளிடையே அறிவியல் ஆர்வத்தையும், ஆராய்ச்சி தன்மையை மேம்படுத்தும் வகையில் இன்ஸ்பையர் என்ற பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்பதற்கு நிகழாண்டில் பிளஸ்1 படித்து வரும் மாணவ, மாணவிகளாக இருக்க வேண்டும். அதோடு, 10-வது தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண்களும், சி.பி.எஸ்.சி 10-வது 95 மதிப்பெண்கள் பெற்று ஏ கிரேடு பெற்றிருக்கவும் வேண்டும்.
மேலும், இதுபோன்ற முகாம்களில் பங்கு பெற்றும் இருப்பது அவசியம் ஆகும். இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் தற்போது பயின்று வரும் பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் அனுமதி பெற்று முதல்வர், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இந்த விண்ணப்பங்களை www.vhnsc.edu.in என்ற இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இது தொடர்பாக பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.இராமனிடம் தொலைபேசி எண்-9245165958 தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். அதோடு, பங்கேற்கிறவர்களுக்கு மத்திய அரசு அறிவியல் தொழில் நுட்ப துறையின் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் முதல்வர் சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

