மல்லாங்கிணறில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.   மல்லாங்கிணர் மெயின் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

   மல்லாங்கிணர் மெயின் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் மல்லாங்கிணர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

  காரியாபட்டி வட்டாட்சியர் முகம்மதுரபிக்கான், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், நிலஅளவையாளர் செபஸ்தியான் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மல்லாங்கிணர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஆர்தர்ஜஸ்டின், கருப்பசாமி தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com