லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் நோபிள் பள்ளி மாணவர் மாநில அளவில் ஆங்கிலப் பாடத்தில் முதலிடம்

விருதுநகர் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியின் மாணவர் 10-வது ஆங்கிலப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ துறையில் நரம்பியல் நிபுணராக வர வேண்டும் என்பதே விருப்பம் எனவும் தெரிவித்தார்.

Updated On :31 மே 2013, 11:16 am

விருதுநகர் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியின் மாணவர் 10-வது ஆங்கிலப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ துறையில் நரம்பியல் நிபுணராக வர வேண்டும் என்பதே விருப்பம் எனவும் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார்(டெக்ஸ்டைல் மில் மேலாளர்)-இந்திராவதி(தமிழாசிரியர்) தம்பதியரின் மகன் சுபசரவணன்(15). பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் ஆவார். இவர் ஆங்கில பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை செய்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம், தமிழ்-94, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-99, சமூக அறிவியல்-100 என மொத்தம் 493 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எனவே அந்த மாணவரை பள்ளியின் முதல்வர் ஜெரால்டு ஞானரத்தினம், இயக்குநர் இனிகோ ஜெரால்டு உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பாராட்டினார்கள்.

இது குறித்து சுப.சரவவணன் கூறுகையில், நாள்தோறும் எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கட்டுப்பாடுடன் படிக்க வேண்டும் வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையிலேயே அன்றைய பாடங்களை உடனே படித்து முடித்து, ஒரு முறை எழுதிப் பார்ப்பேன். அதேபோல் ஆங்கிலப் பாடத்தையும் ஆங்கில அகராதி உதவியுடன் புதிய புதிய வார்த்தைகளை அறிந்து கொண்டு படிப்பேன். அதேபோல், ஆசிரியர்களும்  பிறருடன் ஆங்கிலத்தில் பேசினாலே எளிதில் பழகலாம் என்பார்கள். தமிழ் பாடம் நன்றாக தேர்வு எழுதியிருந்தேன். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால் மறுமதிப்பீடு செய்வேன்.  அதையடுத்து பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ துறையில் நரம்பியல் நிபுணராக வந்து ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.