விருதுநகர் மாவட்ட அளவில் பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரி்க் குலேசன் மேல்நிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகள் மாநில அளவில் தலா 2 பேர் இரண்டவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்து சாதனை செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 10-வது தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகியது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் மாணவர்கள்-14066 பேரும், மாணவிகள்-13940 பேரும் என மொத்தம் 28006 பேர்கள் வரையில் தேர்வு எழுதினார்கள். அதில், மாணவர்கள்-13078 பேர்களும், மாணவிகள் 13441 பேரும் என மொத்தம் 94.69 சதவீதம் பேர் வரையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதில், விருதுநகர் நோபிள் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி ஜே.சி.சன்மதி, இதே பள்ளியைச் சேர்ந்த வி.விஜயபிரபு ஆகியோர் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். அதேபோல், மாவட்டத்தில் முதலிடத்தையும் பிடித்தனர்.
அதேபோல், ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி கே.சண்முகபிரியா, விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் மாணவி சிந்துஜா ஆகியோர் தலா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். அதேபோல், மாவட்ட அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
விருதுநகர் வருவாய் மாவட்ட அளவில் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஏ.குணவேல்ராஜன், எம்.கீர்த்தனா, ஆர்.நீஷாந்தினி, ராஜபாளையம் ரமணா வித்யா மெட்ரிக் பள்ளியின் மாணவி எஸ்.கீர்த்தனா, ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியின் மாணவி டி.எஸ்.நர்மதா ஆகியோர் தலா 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாவது இடங்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 10-வது தேர்ச்சி விகிதம் 93.53 சதவீதம் பெற்றனர். அதேபோல், நிகழாண்டில் மாணவர்கள்-92.98 சதவீதமும், மாணவிகள்-96.42 சதவீதமும் என மொத்தம் 94.69 சதவீதம் வரையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும், கடந்த ஆண்டைப் போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.30 கோடி பறிமுதல்

மகளிா் இடஒதுக்கீடு மசோதா! திமுகவுக்கு பெண்கள் பாடம் புகட்டுவாா்கள்: பியூஷ் கோயல்!

தில்லியில் சட்டவிரோதமாக எல்பிஜி விற்பனை: 3 முகவா்கள் கைது

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

