சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தாமதமின்றி ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று காரியாபட்டி பகுதியை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :14 செப்டம்பர் 2013, 7:39 pm

தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று காரியாபட்டி பகுதியை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுதொடர்பாக ஓய்வூதியம் பெறுவோர் கூறியது:  அருப்புக்கோட்டையில் உள்ள கருவூலம் மூலம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள், பல்வேறு அரசுதுறை ஊழியர்களுக்கு சம்பள பில் அனுப்பப்படுகிறது.      மாதந்தோறும் 30ஆம் தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பில்பாஸ் செய்து வங்கி கணக்கில் சம்பளம் சேரும். ஆனால் இந்த மாதம் 13ஆம் தேதி ஆகியும் இதுவரை வங்கி மூலம் ஓய்வூதியம் வாங்குவோருக்கு ஓய்வூதியம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

     கருவூலத்தில் கேட்டால், எம்.ஐ.சி.ஆர். எண் வங்கியிலிருந்து கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். இதனால் ஓய்வூதியதாரர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

   எனவே  ஓய்வூதியர்களுக்கு விரைந்து ஓய்வூதியம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.