திமுகவினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

தமிழக அரசுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுகவினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.
Updated on
1 min read

தமிழக அரசுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் திமுகவினர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தனர்.

 திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை  மாலை 6 மணியளவில் மல்லாங்கிணர் மெயின் பஜாரில் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கிப் பேசினார்.

   இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, ஒன்றியச் செயலாளர்கள் சண்முகச்சாமி, ப.பா. போஸ், பொன்னுத்தம்பி, நகர செயலாளர்கள் முருகேசன், செந்தில், முன்னாள் துணைத் தலைவர்  ஜெயச்சந்திரன், பேரூராட்சி தலைவர் நாகையா, நவநீதன், சந்தோசம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துராஜா, நகர இளைஞரணி செயலாளர் பூமிநாதன் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், சிவசக்தி, கண்ணன் உள்பட திமுக.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com