தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கார் மீது லாரி மோதல்: நகைக்கடை அதிபர் மனைவி சாவு; 4 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை கார் மீது மணல் லாரி மோதியதில் தூத்துக்குடி நகைக்கடை உரிமையாளர் மனைவி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On :24 செப்டம்பர் 2013, 6:47 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை கார் மீது மணல் லாரி மோதியதில் தூத்துக்குடி நகைக்கடை உரிமையாளர் மனைவி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

  தூத்துக்குடியில் அழகர் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வருபவர் பாலாஜி(40). இவர் தனது மனைவி நர்மதா, தாய் தனலட்சுமி, தந்தை கணேசன் ஆகியோருடன் காரில் சென்னை மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து விட்டு தூத்துக்குடி வந்து கொண்டிருந்தார். மாலை 6 மணி அளவில் திருத்தங்கலைச் சேர்ந்த மணல் லாரி காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி மணல் குவாரியில் மணல் அள்ள வந்து கொண்டிருந்தது. மணல் லாரி கல்குறிச்சி அருகேயுள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த நர்மதா (34) சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் வந்த பாலாஜி, தனலட்சுமி, கணேசன், கார் டிரைவர் கட்டபொம்மன் ஆகிய 4 பேரும் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி மல்லாங்கிணர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணல் லாரி டிரைவர் மாரியப்பனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.