தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருச்சுழி பகுதியில் மிளகாய் சாகுபடி

மிளகாய் நல்வழி சாகுபடி பண்ணைப்பள்ளி சார்பில், திருச்சுழி அருகே கே2 என்ற வீரிய ஒட்டுரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. எம்.ரெட்டியபட்டி வட்டாரத்தில் வேளாண்மை துறையில், அட்மா திட்டத்தின் கீழ்

Updated On :7 பிப்ரவரி 2014, 6:49 pm

மிளகாய் நல்வழி சாகுபடி பண்ணைப்பள்ளி சார்பில், திருச்சுழி அருகே கே2 என்ற வீரிய ஒட்டுரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. எம்.ரெட்டியபட்டி வட்டாரத்தில் வேளாண்மை துறையில், அட்மா திட்டத்தின் கீழ் மிளகாய் சாகுபடி பண்ணைப்பள்ளி ஆலடிபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளியாக மிளகாய் சங்கத்தின் கீழ் உள்ள உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரிய ஒட்டுரக மிளகாய் (கே2) சாகுபடி திடல் பண்ணைப்பள்ளி ஆசிரியர் செல்வன ஜேக்கப் வயலில் அமைக்கப்பட்டது. பண்ணைப்பள்ளி அமைத்துள்ள செல்வன் ஜேக்கப்புக்கு வேளாண்மை விரிவாக்க மையம், எம்.ரெட்டியபட்டியில் அட்மா திட்ட இயக்குநர் சுப்பையா மிளகாய் செயல்விளக்க திடலுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கினார். இடுபொருட்களாக டிஏபி, யூரியா, பொட்டாஷ், மண்புழு உரம், இமிடாகுளோபிரிட், விதை நேர்த்தி செய்வதற்கு தேவையான சூடோமோனஸ், டிரைகோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவை வழங்கப்பட்டன. உரங்களை தேவையான நேரத்தில், தேவையான அளவு உபயோகிப்பதன் மூலம் நல்ல மகசூல் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர், எம்.ரெட்டியபட்டி நாச்சியாரம்மாள் விளக்கிக் கூறினார். ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பிரேமா, மாரியம்மாள் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.