விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கண்மாய்கள் வறண்டதால் 60 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகின. இழப்பீடு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் ஓரளவு மழை பெய்ததால் கண்மாய்களில் நீர் பெருகியது. இதையடுத்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்தனர். காரியாபட்டி அருகே முடுக்கங்குளம் எசலிமலை பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்யாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் வறண்டுவிட்டன. கிணற்றுப் பாசனம் என்பது அந்தப்பகுதியில் இல்லை. எனவே, விவசாயிகள் நெற்பயிர்களை காப்பாற்ற கண்மாய் பாசனத்தையே நம்பி இருந்த நிலையில், கண்மாய்கள் வறண்டு விட்டதால் நெற்பயிரை காப்பாற்ற முடியவில்லை.
நாற்று நட்ட பின்பு ரசாயன உரங்கள் இட்டதால் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள போதிலும் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச முடியாததால் நெல்மணிகள் கருகி விட்டன. இதனால் 60 ஏக்கரில் நெல் சாகுபடி செய்திருந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி மணி கூறியதாவது:
கடந்த ஐப்பசி மாதம் மழை பெய்ததால் கண்மாயில் நீர் பெருகிய உடன் தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் நெல் சாகுபடியை தொடங்கினோம். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம். ஆனால் தொடர்ந்து மழை பெய்யாத நிலையில், கண்மாய்கள் வறண்டு விட்டன. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள போதிலும் நெற்கதிர்கள் கருகி விட்டன. இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் இப்போதும் பெரும் நஷ்டம் அடைந்துள்ளோம். எனவே அரசு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

