விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவிலி.யில் ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீஆண்டாள் கோயில் திருஆடிப்பூர பெருவிழாவில் சனிக்கிழமை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

News image
Updated On :26 ஜூலை 2014, 9:25 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீஆண்டாள் கோயில் திருஆடிப்பூர பெருவிழாவில் சனிக்கிழமை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருஆடிப்பூர பெருவிழாவில் 5-ம் திருநாளில் ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றும். இதற்காக ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு ஸ்ரீபெரியாழ்வார் எழுந்தருளினார். அங்கு ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் சிங்கம்மாள் குறடு மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர்.

ஐந்து கெருட சேவை:

ஸ்ரீஆண்டாள் பெரிய அன்னவாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகிய எம்பெருமான்கள் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளினர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். ஐந்து கெருட சேவையையொட்டி சிறப்பு வான வேடிக்கைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.