திருச்சுழியில் லாரி திருட்டு

திருச்சுழி அருகே உள்ள கொட்டத்தை சேர்ந்தவர் குமார். இவர் டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். லாரியை தமிழ்பாடியை சேர்ந்த கருப்பையா(43) ஓட்டி வந்துள்ளார்.
Updated on
1 min read

திருச்சுழி அருகே உள்ள கொட்டத்தை சேர்ந்தவர் குமார். இவர் டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். லாரியை தமிழ்பாடியை சேர்ந்த கருப்பையா(43) ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில்  திருச்சுழி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் வியாழக்கிழமை இரவில் லாரியை நிறுத்திவிட்டு, காலையில் பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து கருப்பையா, உரிமையாளர் குமாரிடம் தகவல் கொடுத்துள்ளார்.

 குமார் கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் லாரியை தேடி வருகின்றனர். கடந்த மாதம் சவ்வாஸ்புரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் லாரியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுவரை அந்த லாரியை போலீசார் கண்டுபிடிக்கவில்லையென லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சங்கர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com