ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கலசலிங்கம் பல்கலை. பேராசிரியருக்கு இளம் விஞ்ஞானி விருது

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், இயந்திரவியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ்.சரவணசங்கர் ஆலோசனையின் பேரில் இவர் இணை கோடுகளில் அமைக்கப்பட்ட பலதரப்பட்ட மிஷின்களிடையே சரியான

News image
Updated On :7 மே 2014, 10:19 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் எஸ்.பத்ரிநாத் (படம்) க்கு தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் இளம் விஞ்ஞானி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், இயந்திரவியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ்.சரவணசங்கர் ஆலோசனையின் பேரில் இவர் இணை கோடுகளில் அமைக்கப்பட்ட பலதரப்பட்ட மிஷின்களிடையே சரியான வரிசையில் மெட்டீரியல்களை செலுத்தி அதிக உற்பத்தி பெறுவது தொடர்பான ஆராய்ச்சியை செய்து வருகிறார். இவர் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி, இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பித்திருந்தார்.இதனை ஏற்றுக் கொண்ட ஆராய்ச்சிக் கழகம், இவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழக உறுப்பினர் மற்றும் செயலாளர் ராமசாமி அனுப்பியுள்ள உத்தரவில், பேராசிரியர் எஸ்.பத்ரிநாத் இந்த ஆராய்ச்சியை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள அவருக்கு நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் 3 மாதத்திற்குள் ஆராய்ச்சியை முடித்து அதன் முடிவு அறிக்கையை அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்திற்கு சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.இளம் விஞ்ஞானி விருது பெற்ற பேராசிரியர் எஸ்.பத்ரிநாத்தை பல்கலைக்கழக நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.