திருச்சுழி பகுதியில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு

பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் கணக்கெடுப்பு துவங்கியது.
Updated on
1 min read

பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் கணக்கெடுப்பு துவங்கியது.

திருச்சுழி ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் கடந்த கல்வியாண்டில் பள்ளியை விட்டு இடையில் நின்ற மாணவர்களை கண்டுபிடித்து மீண்டும் அவர்களை கல்வி அறிவை பெற செய்யும் பொருட்டும், 18 வயது வரையிலான மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களுக்குரிய கல்வி மற்றும் அடையாள அட்டை, சலுகைகள் முதலியவைகளை பெறச் செய்ய இக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

எதிர்வரும் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்பாடுகளை தீர்மானிக்கவல்ல இக்கணக்கெடுப்பு திருச்சுழி ஒன்றியத்திற்குட்பட்ட 135 குடியிருப்புகளிலும் நடைபெறுகிறது. வட்டார மைய ஆசிரியர், பயிற்றுநர்கள் இப்பணியினை மேற்கொள்கின்றனர். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மாடசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் நடைபெறும் இப்பணியினை உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கருப்பசாமி, தேன்மொழி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com