திருச்சுழி அருகே மாதா கோயில் திருவிழா

திருச்சுழி அருகே நடைபெற்ற மாதா கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருச்சுழி அருகே உள்ள தும்முசின்னம்பட்டி கிராமத்தில் வியாகுல மாதா கோயில் உள்ளது. சுமார்
Updated on
1 min read

திருச்சுழி அருகே நடைபெற்ற மாதா கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

திருச்சுழி அருகே உள்ள தும்முசின்னம்பட்டி கிராமத்தில் வியாகுல மாதா கோயில் உள்ளது. சுமார் 300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தேவாலய விழாவில் இப்பகுதியிலுள்ள இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடி வருகின்றனர். இக்கிராமத்தில் 2 நாள்கள் வீதி உலா வரும் வியாகுல மாதாவை அந்தந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சப்பரத்தை சுமந்து சென்று கொண்டாடுவது காலம்காலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து சமுதாய பெண்கள் மாதாவை வரவேற்கும் விதமாக வீடுகளுக்கு முன்பாக மெழுகுவர்த்தியேந்தியும், கையில் பூக்களுடனும் நிற்பார்கள். நல்லிணக்கத்தை பேணும் வகையிலும், அனைத்து மத கடவுள்களை போற்றும் விதத்திலும் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.

கொடியேற்றத்துடன் விழா துவங்கி தினந்தோறும் பிரார்த்தனை நடைபெற்றது. எட்டாவது நாள் சிறப்பு ஜெப ஆராதனை கூட்டம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட மாதாவின் சப்பர ஊர்வலம் ஆலயத்தில் இருந்து துவங்கியது.

தும்முசின்னம்பட்டியை சேர்ந்த சின்னதம்பி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 300 வருடங்களுக்கு மேலாக மாதா கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முரண்பாடாக செயல்படும் நபர்களை மாதா அடுத்த திருவிழாவிற்குள் தண்டிப்பார் என்பது நம்பிக்கை. விழாவில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் கொண்டாடி வருகிறோம். இதுபோன்ற நிகழ்வு சமுதாய நல்லிணக்கத்தோடு நடைபெறும் திருவிழாவாக கருதுகிறோம் என்றார்.

திருவிழாவில் அருள்தந்தைகள் பெர்க்மான்ஸ், பால் ஆன்ரூஸ் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு மாதாவின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com