இலவச வேட்டி, சேலை வழங்கக் கோரி கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே 3 ஆண்டுகளாக இலவச வேட்டி, சேலைகள் வழங்காததைக் கண்டித்து, டி.செட்டிகுளத்தில் கிராம மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே 3 ஆண்டுகளாக இலவச வேட்டி, சேலைகள் வழங்காததைக் கண்டித்து, டி.செட்டிகுளத்தில் கிராம மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.

டி.செட்டிகுளம் ஊராட்சியில், காஞ்சிரங்குளம், எசலிமடை காலனி, வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள், காரியாபட்டி தாலுகா மற்றும் ஒன்றியத்தில் உள்ளன. ரேஷன் கடை மட்டும் திருச்சுழி தாலுகாவில் உள்ளது.

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் எந்த தாலுகாவில் இருந்து வழங்குவது என்ற குழப்பத்தால், கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லையாம். இந்த ஆண்டாவது இலவச வேட்டி, சேலைகள் கிடைக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைக்குச் சென்று பொதுமக்கள் இலவச வேட்டி, சேலை கேட்டபோது, இன்னும் வரவில்லை என பதிலளித்துள்ளனர். எனவே, கிராம மக்கள் ரேஷன் அட்டைகளோடு கடையை முற்றுகையிட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக வேட்டி, சேலைகள் வழங்காதது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. எங்கள் கிராமத்துக்கு அரசின் இலவசத் திட்டங்கள் கிடைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com