காரியாபட்டி பகுதியில், மக்காசோளம் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டியில் ஆண்டுக்கு ஆண்டு மக்காசோளம் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. 2014-ஆம் ஆண்டு மானாவாரி, கிணற்று பாசனத்தால் அக்டோபரில் 10 ஆயிரம் ஹெக்டேரில் மக்காசோளம் விதைப்பு செய்தனர்.
ஜனவரி 10-ஆம் தேதி முதல் அறுவடை நடைபெற்று வருகிறது. நல்ல மழைபொழிவு இருந்ததால் 70 சதவீத மகசூல் கிடைத்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
அதேசமயம், மக்காசோளத்திற்கு உரிய விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் சங்கத்தலைவர் கண்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: வியாபாரிகள் ஒரு குவின்டால் (100 கிலோ) ரூ.1100 என விலை நிர்ணயிக்கின்றனர்.
சில கிராமங்களில் குவிண்டால் ரூ.1000-க்கு கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகள் நான்கு மாதம் காட்டில் இரவு, பகலாக பாடுபட்டு விளைவித்த பயிருக்கு உரிய விலை கிடைக்காததால் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, நெல்லுக்கு ஆதாரவிலை நிர்ணயித்தது போல் மக்காசோளத்திற்கும் ஆதார விலை அரசு அறிவித்து கொள்முதல் செய்திட வேண்டும்.
காரியாபட்டி பகுதியில் மக்காச்சோளம் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு மக்காசோளம் மலேசியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஏற்றுமதியானது. அப்போது, குவிண்டால் ரூ.1450-க்கு விலை போனது.
தற்போது ஏற்றுமதிக்கு விற்பனை வரி உயர்ந்து விட்டதால், ஏற்றுமதியும் குறைந்து விட்டது. எனவே, அரசு விற்பனை வரியை குறைத்து, விவசாயிகளிடம் மக்காசோளத்தை கொள்முதல் செய்து நஷ்டத்தில் உள்ள விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

