லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் சாவு
விருதுநகர் அருகே லாரிக்கு டயர் மாற்றிய போது கண்டெய்னர் லாரி மோதி பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே லாரிக்கு டயர் மாற்றிய போது கண்டெய்னர் லாரி மோதி பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலியில் இருந்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்திற்குச் சென்ற லாரி, திங்கள்கிழமை விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரே நான்கு வழிச்சாலையில் பஞ்சராகி நின்றது. லாரியின் டயரை மாற்ற டிரைவர் கார்த்திக்குக்கு, சூலக்கரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆசிர்வாதம்(41) உதவினார். அப்போது, தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில், டயர் மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக், ஆசிர்வாதம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பயனின்றி ஆசிர்வாதம் உயிரிழந்தார். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் தூத்துக்குடி அருகே மங்களகிரியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ்குமாரை(35) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

