வாறுகால் வசதி கோரி ஆட்சியரிடம் மனு
குடிநீர் மற்றும் கழிவுநீர் வாறுகால் வசதி அமைத்துத்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
குடிநீர் மற்றும் கழிவுநீர் வாறுகால் வசதி அமைத்துத்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியம் சுக்கிரவார்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆட்சியர் வே.ராஜாராமனிடம் திங்கள்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
இப்பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் வசதியில்லாமல் இருந்து வருகிறோம். கழிவுநீர் வாறுகால் மற்றும் மயான வசதியும் இல்லை. இது குறித்து சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்துள்ளோம்.
மேலும், குடிநீருக்காக ஒரு கி.மீ தூரம் வரையில் நடந்து சென்று வரவேண்டியுள்ளது. அதனால், சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி அமைத்து தர வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

