தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!
/

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகள்: விவசாயிகள் அவதி

ராஜபாளையம் அருகே பெரியகுளம் கண்மாய் பாசன நிலங்களில்  விளைச்சலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

Updated On :

ராஜபாளையம் அருகே பெரியகுளம் கண்மாய் பாசன நிலங்களில்  விளைச்சலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

  ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டான் கிராமத்தை சேர்ந்தது பெரியகுளம் கண்மாய். இக் கண்மாயை சுற்றி ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. 10 விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கடந்த மாதம் கரும்பு சாகுபடி செய்யப் பட்டுள்ளது. ஊடுபயிராக 4 ஏக்கர் பரப்பளவில் கத்திரி, தக்காளி, மிளகாய் மற்றும் பீர்க்கங்காய் பயிரிடப் பட்டுள்ளன.

 இந்த பயிர்களை கடந்த 10-ஆம் தேதி காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தின. சுமார் 25 ஏக்கரில் கரும்பு சேதமானது. அந்த இடங்களில் மீண்டும் பயிர் வகைகளை நட்டாலும் மறுநாள் சுமார் 60 பன்றிகள் புகுந்து புதிய பயிர்களையும் நாசம் செய்தன.

இதையடுத்து இரவுக் காவலுக்கு ஆள் வைத்ததால் பன்றிகளின் அட்டகாசம் குறைந்தது. தற்போது ஒரு மாத கரும்பு பயிர்கள் சுமார் 5 அடி வரை வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் பன்றிகளின் அட்டகாசம் துவங்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வன விலங்குகள் பட்டியில் உள்ள காட்டுப் பன்றிகளை விவசாய காடுகளுக்கு வர விடாமல் தடுக்க வனத்துறையினரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பன்றிகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.