வனத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு போட்டி
விருதுநகர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரினங்கள் தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
விருதுநகர் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரினங்கள் தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியும் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்
அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணலாயம் சார்பில் அக்.2 முதல் 8 வரையில் விழா கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சு, விநாடி-வினா ஆகிய போட்டிகள் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இப்போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தொடங்கி வைத்தார். விருதுநகர் வனத்துறை கோட்ட அலுவலர் அசோக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓவியப்போட்டியில் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் 89 பேரும், பேச்சு போட்டியில் 29 பேரும், விநாடி-வினா போட்டியில் 24 குழுக்களும் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு நடுவர்களாக சுற்றுச்சூழல் மற்றும் பசுமைப்படை இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டனர்.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வனத்துறை சார்பில் அக்.5-ஆம் தேதி ஆட்சியர் தலைமையில் வழங்கப்படவுள்ளது. இதில், தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டியில் முதலிடம் பெறுபவர்கள் மட்டும் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

