5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

இசையை கருவியாக்கிய மணிப்பூர் நாட்டுப்புறக் கலைஞர்..! போராட்டம், வலி, நம்பிக்கையைப் பாடும் மங்கா!

மணிப்பூர் நாட்டுப்புறக் கலைஞர் மங்கா மயங்லம்பம் அளித்த பேட்டி குறித்து...

Manipur folk artist Manga  Mangka Mayanglambam

மணிப்பூர் நாட்டுப்புறக் கலைஞர் மங்கா மயங்லம்பம் - படம்: இன்ஸ்டா / மங்கா மயங்லம்பம்

Updated On :

மணிப்பூர் நாட்டுப்புறக் கலைஞர் மங்கா மயங்லம்பம் அளித்த பேட்டியில், “கடந்த 2023ல் பல குழந்தைகள் கொல்லப்பட்டனர்; அந்தத் துயரம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. இசைதான் எனது கருவி” எனக் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ஜோத்பூரில் நடைபெற்ற ஆர்ஐஎஃப்எஃப் (ராஜஸ்தான் இன்டர்நேஷனல் ஃபோல்க் ஃபெஷ்டிவல்) கலந்துகொண்ட மங்கா மயங்லாம்பம் பாடல் பாடி இசையமைத்தார்.

மணிப்பூரில் கடந்த 2023 முதல்  மைதேயி-குகி இனக் குழுக்களிடையே மோதல் வெடித்து வருகிறது. முதல்முறையாக குகி ஆயுதக் குழுவினரின் முகாமை தமது கட்டுப்பாட்டில் பாதுகாப்புப் படையினர் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், மணிப்பூரின் பாரம்பரிய இசைக்கருவியான பெனா (pena) மூலம் கவனம்பெற்ற கலைஞர் மங்கா மயங்லம்பம் கடந்த 2024ல் ’பேரழிவு: இயற்கை அன்னையின் அழைப்பு’ (Apocalypse: The Call of Mother Nature) என்ற பாடலை எழுதினார்.

இந்தப் பாடல் தொடக்கத்தில் 2019-2020 வாக்கில் எழுத தொடங்கியுள்ளார். கரோனா காலகட்டம் என எப்படியோ நான்காண்டுகளாக எழுத முடியாமல் போனதாகவும் பின்னர் 2023 வன்முறையின்போது இந்தப் பாடலை எழுதி, 2024ல் வெளியிட்டார்.

இந்த நிலையில், ஜோத்பூரில் நடைபெற்ற ஆர்ஐஎஃப்எஃப் விழாவில் பிடிஐக்கு அளித்த பேட்டியில் மங்கா பேசியிருப்பதாவது:

கரோனா சமயத்தில் மனித நாகரிகமே அழிந்துவிட்டதாக நினைத்தேன். நமது நடவடிக்கைகளுக்காக இயற்கையின் அன்னையே பழிவாங்கியது போல இருந்தது. அந்த சமயத்தில் இரண்டு பத்திக்கு மேல் எழுத முடியவில்லை. பிறகு, 2023ல் பல அப்பாவி குழந்தைகளைக் கொல்லப்பட்டனர்.

கடைசி இரண்டு பத்திகளில் ஒருவரை ஒருவர் வெறுக்கும் மனிதாபிமானம் அற்றது குறித்து எழுதினேன். அன்பு என்பதே எங்களுக்கு இல்லை. மரங்கள் நடனமாடியும் பறவைகள் எங்களை கேலி செய்வதாகவும் ஆறுகள் நாங்கள் அழிந்துவிடுமோன நினைத்ததாகவும் உவமையாக எழுதினேன்.

பாடல்கள், கதைகள் எல்லாம் மாறிவிட்டன. கதைகளில் அன்பு, அமைதி குறித்து எழுதினாலும் எனக்கு முந்தைய ஆண்டுகள் ஞாபகத்துக்கு வந்து எல்லாமே கருமையாகி விடுகின்றன.

நான் நன்றாக உடை அணிந்து இருக்கலாம். அலங்காரம் செய்திருக்கலாம். ஆனால், எனது மனத்திற்குள் மணிப்பூரின் பாடலை பாடும்போது வார்த்தைகளில் விவரிக்க முடியாத வலி எனக்கு ஏற்படுகிறது

இசை எனக்கு கருவி, எனது அதிகாரம். மணிப்பூர் அமைதியாகவும் அழகான இடமாகவும் இருந்தது என்பதை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இசையே உதவுகிறது. ஒவ்வொரு பாடலைப் பாடும்போது, ஒவ்வொரு கதையை சொல்லும்போது அது எனக்குள் வேறுவிதமாக பிரதிபலிக்கிறது.

மணிப்பூரில் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பில்லை. இதுதான் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரே வருமானம். 90 சதவிகித கலைஞர்கள் மணிப்பூரில் மட்டுமே செயல்படுகிறார்கள்.

மூன்று ஆண்டுகளாக எந்த திருவிழாவும் கொண்டாட்டமும் விழாக்களும் இல்லாமல் இருப்பதை நினைத்து பாருங்கள். வெறுமனே போராட்டங்கள் மட்டுமே. கடந்த 2023முதல் தாய்மார்களின் அழுகை மட்டுமே நாங்கள் கேட்கும் மெல்லிசை. நாங்களும் வேறுவிதமாகப் போராடுகிறோம். அதிகாரமற்ற நாங்கள் மேடைகளில் போராடுகிறோம்.

இந்தக் கடினமான நேரத்தில் இசை பலரையும் ஆற்றுப்படுத்துகிறது. சில கண நேரமாவது மற்றவர்களை ஆற்றுப்படுத்த இசை எனக்கு கருவியாகவும் அதிகாரமாகவும் இருக்கிறது. பல கேம்ப்களில் இதனை வாசித்து காட்டி மக்களிடம் பேசி இருக்கிறேன். அதனால்தான் இதனை இன்னும் விடாமல் இருக்கிறேன். பல மக்கள் இந்த தொழிலை கைவிட்டு விட்டார்கள். பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத சூழல் இருக்கிறது என்றார்.

மணிப்பூரில் அழிந்து வரும் பெனா என்ற இசைக்கருவியை வைத்து பாடல் இசைக்கும் கடைசி நாட்டுப் புறக் கலைஞராக மங்கா இருக்கிறார். தற்போது இவரது இசை யூடியூப், ஸ்பாடிஃபை என உலகின் அனைத்து ரசிகர்களிடமும் சென்று சேர்ந்துகொண்டிருக்கிறது.

Summary

Music is my weapon: Manipuri pena artiste Mangka Mayanglambam sings of pain, hope amid conflict

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.