ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

நாட்டுப்புறக் கலைகளை நேசிக்கும் நூலகம்

தொலைக்காட்சிகளும், கைப்பேசிகளும் ஆக்கபூர்வ உபயோகங்களில் இருந்து திசை திருப்ப எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மீறி சேவையை ஈடுபாட்டுடன் செய்து வருபவை நூலகங்கள்தான்.

Updated On :

தொலைக்காட்சிகளும், கைப்பேசிகளும் மக்களின் நேரத்தை ஆக்கபூர்வ உபயோகங்களில் இருந்து திசை திருப்ப எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மீறி வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கும் நேசிப்பாளர்களுக்கான சேவையை ஈடுபாட்டுடன் செய்து வருபவை நூலகங்கள்தான். இந்த நூலகங்களில் மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகம் இன்னொரு பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது. நூலகத்தின் இரண்டாம் மாடியில் நாட்டுப்புறக் கலைக் கண்காட்சிக் கூடம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலைநேசிப்புகளைப் பார்க்க வந்த வாசகர்கள் சிலரிடம் பேசியபோது:

'இங்கே நாட்டுப்புறக் கலைஞர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி, பொய்க்கால் குதிரை, காளையாட்டம் போன்றவற்றுக்காக உபயோகப்படுத்தும் உருவக் கூடுகள், உறுமி, பம்பை, தொம்மி, மான்கொம்பு, சேகண்டி, உடுக்கை, கிடுகிட்டி (தண்டோரா) போன்ற இசைக்கருவிகள், அவர்கள் உடுத்தும் வித்தியாசமான உடைகள், மரக்கால்கள், ஆபரணங்கள் போன்ற பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள திச்சியம், அனுப்பானடி, மன்னாடி மங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களின் புகைப்படங்களும், அவர்கள் பெற்ற விருதுகள், பாராட்டுகள் முதலான விவரங்களும் புகைப்படங்களாக சுவர்களில் மாட்டப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலைகள் பற்றிய நூல்களின் தொகுப்புகளும் சில அலமாரிகளில் தனியாக வைக்கப்பட்டுள்ளன.

சில கலைகள் குடும்பப் பாரம்பரியமாகத் தலைமுறைகளைக் கடந்து வருகின்றன. சிலவற்றைத் திருவிழாக்கள் அல்லது குறிப்பிட்ட சமூக நிகழ்வுகளில் மட்டுமே காணமுடியும். எல்லாக் கலைகளும் அந்தந்த வட்டார மக்களின் கலாசார நுகர்வுக்கு ஏற்ற வகையில் எல்லாக் கிராமங்களிலும் இன்றும் தொடர்ந்து வளர்க்கப்படுகின்றன.

குறிப்பாக, மதுரை மாவட்டக் கிராம வட்டாரங்களில் அறியப்படும் முக்கியமான கலை வடிவங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், தப்பாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, தோல்பாவைக் கூத்துகள் போன்றவையாகும். மேலூர், ஒட்டாம்பட்டி, அலங்காநல்லூர், செல்லம்பட்டி, வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி போன்ற இடங்களில் இந்தக் கலைவடிவங்களின் பங்களிப்பு இல்லாமல் உள்ளூர்த் திருவிழாக்கள் கிடையாது.

நடமாடும் வாகனத்திலும் கலை நேசிப்பு பிரசாரம்

மாவட்ட மைய நூலகத்தில் ஒரு நடமாடும் நூலக வாகனம் இருக்கிறது. அது மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு சிறிய ஊர்களுக்கும் செல்கிறது. அங்கே உள்ள பொதுமக்களுக்கு மட்டுமின்றி, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நூலகத்தின் பெருமைகளைச் சொல்லி, இந்த வண்டியில் கொண்டு செல்லப்படும் புத்தகங்களை வழங்கி வருகிறது.

அங்கிருப்போருக்கு மாவட்ட மைய நூலகத்தைப் பற்றியும், அதில் அமைந்துள்ள இந்த நாட்டுப்புறக் கலைக் கண்காட்சிக் கூடத்தைப் பற்றியும் சொல்லி, அவர்கள் வந்து பார்த்துச் செல்வதை ஊக்குவிக்கின்றனர்.

கலைக்கண்காட்சிக் கூடத்தின் சுத்தம், அது எவ்வளவு ஈடுபாட்டுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதைக் காட்டுகிறது. பெற்றோர்கள் தம் பிள்ளைகளையும், ஆசிரியர்கள் தம் மாணவர்களையும் அழைத்துச் சென்று அவசியம் காட்ட வேண்டிய ஒரு முக்கியமான இடம்' என்றனர் வாசகர்கள்.

-பெ.நாயகி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.