
மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்!
மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீட்டின் வெளியே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து...

மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கெய்ஷம் மேகசந்திரா - கோப்புப் படம் | FB
மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கெய்ஷம் மேகசந்திரா வீட்டின் வெளியே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கெய்ஷம் மேகசந்திராவின் வீட்டின் வாசலில், கடந்த வியாழக்கிழமை (செப். 3) இரவு 8.15 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது, கெய்ஷம் மேகசந்திரா வீட்டில் இல்லை எனக் கூறப்படும் நிலையில், தாக்குதலுக்குக் கையெறி வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கெய்ஷம் மேகசந்திராவின் வீட்டின் மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனக் கூறி இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி, காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் ஹரேஷ்வர் கோஸ்வாமி இன்று கூறுகையில்,
“காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் வீட்டின் மீதான வெடிகுண்டு தாக்குதலை நாங்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகக் கருதுகிறோம். கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதனை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி விவாதிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Summary
Congress has condemned the bomb attack carried out outside the residence of Manipur Congress President Keisham Meghachandra.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





