2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

1655 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

சிவகாசி பகுதியில் உள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்த 1655 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை சனிக்கிழமை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

Published On :

சிவகாசி பகுதியில் உள்ள 13 பள்ளிகளைச் சேர்ந்த 1655 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை சனிக்கிழமை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

திருத்தங்கல் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், திருத்தங்கல் நகர்மன்றத் தலைவி தனலட்சுமி கணேசன், துணைத் தலைவர் பொ.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கல்வி அலுவலர் பொ.ராமச்சந்திரன் வரவேற்றார்.திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சீ.ரா.அரசு மேல்நிலைப்பள்ளி, பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 13 பள்ளிகளைச் சேர்ந்த 1655 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:

 விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ 92.44 கோடி மதிப்பீட்டில் 67676 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. 81757 மாணவ மாணவிகளுக்கு ரூ 26.11கோடி மதிப்பீட்டில் விலையில்லா   மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்பினை பயன்படுத்தி வாழ்கையில் முன்னேற வேண்டும் என்றார் அமைச்சர்.

அதிமுக மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.