காங்கிரஸ் கட்சி துவங்கிய நாள் விழா

விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதிகளில் காங்கிரஸ் கட்சி துவங்கிய நாள் (டிசம்பர்- 28, 1885) விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதிகளில் காங்கிரஸ் கட்சி துவங்கிய நாள் (டிசம்பர்- 28, 1885) விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
    இதையொட்டி, விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், வாழ்வாங்கி கிராமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, ஓபிசி மாவட்டத் தலைவர் உலக்குடி செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில், வேணுகோபால், வட்டாரத் தலைவர் ஜீவானந்தம், இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம், பொதுச் செயலர் நரிக்குடி பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் ராகுல் காந்தி முகமூடி அணிந்து வந்திருந்தனர்.   
ராஜபாளையம்
    விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக, சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி முறம்பில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.  இதில், காங்கிரஸ் நிர்வாகி நல்லதம்பி, மாவட்டத் தலைவர் தளவாய்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன். சக்திமோகன்,   வட்டாரத் தலைவர் ஆ. ரெங்கசாமி, சாத்தூர் தொகுதி தலைவர் ஆறுமுககனி, ராஜபாளையம் தொகுதி தலைவர் மாணிக்கம், மாவட்டபொதுச் செயலர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com