சிவகாசியில் உணவு பாதுகாப்பு  தரச் சட்டத்தில் உரிமம் வழங்கும் முகாம்

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, சிவகாசி வர்த்தக சங்கம் ஆகியனஇணைந்து, சிவகாசியில் வியாழக்கிழமை உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு வழங்கும் முகாமை நடத்தின.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை, சிவகாசி வர்த்தக சங்கம் ஆகியனஇணைந்து, சிவகாசியில் வியாழக்கிழமை உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு வழங்கும் முகாமை நடத்தின.
     கடைகளிலும், தள்ளுவண்டியிலும் உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவர்கள், உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவு செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கு கீழ் உணவு வணிகம் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ. 100 கட்டணமும், ரூ. 12 லட்சத்துக்கு மேல் உணவு வணிகம் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ. 2000 கட்டணமும், மறு பொட்டலம் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ. 3000 கட்டணமும், தயாரிப்பாளர்கள் ஆண்டுக்கு ரூ. 3000 கட்டணமும் செலுத்தி, உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் கீழ் தங்களது கடைக்கு உரிமம் பெற்று பதிவு செய்து கொள்ளவேண்டும். 
     இந்நிலையில், உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் பதிவு செய்யும் முகாம், சிவகாசி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை, விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டி. அனுராதா தொடக்கி வைத்தார்.
    இதில், டீ கடைக்காரர்கள், தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்பவர்கள், துரித உணவு விற்பனை செய்பவர்கள், சிற்றுண்டிவிடுதி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினர் உரிமம் பெற்று, தங்களது பெயரை பதிவு செய்துகொண்டனர்.    இதில், சிவகாசி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜி. வெங்கடேஷ், சாத்தூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்  நாராயணன், சிவகாசி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சட்டநாதன், சிவகாசி வர்த்தக சங்கத் தலைவர் சமுத்திரபாண்டியன், செயலர் ரவி அருணாசலம், பொருளாளர் நாகராஜன், துணை பொதுச் செயலர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை, ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com