ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாத்தூர் அருகே வாகன நிறுத்துமிடமாக மாறிய அணுகுசாலை

சாத்தூர் அருகே அணுகுசாலையில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:07 am

DIN

சாத்தூர் அருகே அணுகுசாலையில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
   சாத்தூர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை, பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. நான்கு வழிச்சாலையின் இருபுறமும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் அணுகு சாலை அமைக்கபட்டுள்ளது.  இந்த பகுதியில் ஏராளமான கடைகள், கோயில்கள், மருத்துவமனை ஆகியவை உள்ளன. இதில் கடைகளுக்கு முன்பு அணுகு சாலையில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.இப்பகுதியில் வசிப்பவர்களும் அவசரத்திற்கு வெளியூர் செல்லும் பேருந்துக்கு செல்பவர்களும், கடைகளுக்குச் செல்பவர்களும் இதுபோன்று  சாலையில் தங்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.  
இதனால் அணுகு சாலை இரு சக்கர வாகனம் நிறுத்தும் சாலையாக மாறி உள்ளது.  இதனால் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.
  எனவே இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க போக்குவரத்து காவல்துறையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.