எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருத்தங்கலில் அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:12 am

DIN

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருத்தங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1100 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதாகியுள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த சுவரை சீரமைக்க வேண்டும் என
அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
ஆனால் சுவரை சீரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். பள்ளி மாணவிகளின் நலன் கருதி இந்த சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.