அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானிய விலையில் களைக்கொல்லி

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியத்தில் களைக்கொல்லி மருந்து விநியோகிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கா. பாஸ்கரராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:08 am

DIN

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியத்தில் களைக்கொல்லி மருந்து விநியோகிக்கப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கா. பாஸ்கரராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் நடப்பு ராபி பருவத்தில் நெல் பயிர்க்கான சாகுபடி பரப்பு 1000 ஹெக்டேர் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது பகுதிகளில் நெல் சாகுபடியில் முக்கிய களைப்பயிர்களான குதிரைவாலி புல் போன்ற புல் வகைகள், கோரை வகைக்களைகள் மற்றும் அகன்ற இலை களைச்செடிகள் போன்றவை நில வளம் மற்றும் நீர் வளங்களை எடுத்துக்கொண்டு நெற்பயிரின் மகசூலைப் பாதிக்கிறது.
களைப்பயிர்கள் ஊட்டச்சத்து, நீர், மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள நெற்பயிருடன் போட்டி ஏற்படுவதால் பயிரின் மகசூல் 10 முதல் 25 சதவீதம் வரையிலும் மற்றும் நெல் மணியின் தரமும் குறைகின்றது. 2017-18 ஆம் நிதியாண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்திற்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் - நெல் இயக்ககத்தின்கீழ் களைக்கொல்லி விநியோகத்திற்கு ஹெக்டேருக்கு ரூ. 500 வீதம் அல்லது 50 சதவீதம் அரசு பின்னேற்பு மானியமாக 80 ஹெக்டேருக்கான இலக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நடவு நட்ட மூன்றாம் நாளில் பூட்டாக்குளோர் 50 சதவீதம், இ.சி. களைக்கொல்லியினை ஹெக்டேருக்கு 2.5 லிட்டர் வீதம் அல்லது அனிலோபாஸ் 30 சதவீதம் இ.சி.  1325 மிலி மருந்தினை  50 கிலோ உலர்ந்த மணலில் கலக்கப்பட்டு மண் மறையுமாறு சிறிய அளவு நீர் நிறுத்தி தூவப்படவேண்டும். நீர் வடித்தலோ அல்லது கட்டுதலோ அடுத்த இரு நாட்களுக்கு தவிர்த்தல் வேண்டும்.  
மேற்கண்ட களைக்கொல்லியினை தனியார் உரக்கடைகளில் வாங்கி உபயோகப்படுத்திய பின் செலவினப்பட்டியலை உதவி வேளாண்மை அலுவலர்களிடமோ அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்திலோ சமர்ப்பிக்கும் பட்சத்தில் அரசு பின்னேற்பு மானியம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதனையும், களைக்கொல்லிகளை உபயோகிப்பதால் களையெடுக்கும் கூலி ஆட்கள் செலவு குறையும் அதன் மூலம் விவசாயிகளின் வருமானமும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.