சாத்தூரில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
சாத்தூரில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிப் பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்காக சாலைகளில் குழாய் பதிக்க குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த குழிகள் சரியாக மூடப்படாததால், சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. அதே போல் சாத்தூர் 1 ஆவது வார்டுக்குள்பட்ட குருலிங்காபுரம், பெரியார் நகர், வெள்ளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே சாலலைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக சாத்தூர் பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விட்டன. ஒரு சில பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கிக் கிடக்கிறது.
இதனால் இருசக்க வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் பள்ளிகளும் உள்ளதால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க சாத்தூர் நகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
