விடுதியில் தூக்கிட்டு மாணவர் தற்கொலை
அருப்புக்கோட்டையிலிருந்து சுக்கில் நத்தம் செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் நலத் துறை கல்லூரி மாணவர் விடுதி உள்ளது.


அருப்புக்கோட்டையிலிருந்து சுக்கில் நத்தம் செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் நலத் துறை கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு சுமார் 50 மாணவர்கள் தங்கியுள்ளனர். இங்கு தங்கியிருந்தவர், விளாத்திகுளம் அருகே உள்ள குலயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்துராமச்சந்திரன்(19). அருப்புக்கோட்டை -திருச்சுழி சாலையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் விடுதியின் சமையலறையில் தூக்கிட்ட நிலையில் புதன்கிழமை சடலமாகத் தொங்கினார். மாணவர் இறப்புக்கான காரணங்கள் குறித்து நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...