வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

காவிரி விவகாரம்: ராஜபாளையத்தில் இந்திய கம்யூ. ரயில் மறியல்: 110 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ராஜபாளையத்தில் புதன்கிழமை ரயில் மறியல்

Updated On :5 ஏப்ரல் 2018, 8:30 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, ராஜபாளையத்தில் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 காலை 9 மணிக்கு வரும் செங்கோட்டை பயணிகள் ரயிலை மறிக்க, 50-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் நின்றிருந்தனர். இதையடுத்து ரயில் நிலையம், சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். 
காலை 8.45 மணிக்கு ரயில் நிலையத்துக்குள் செல்ல கட்சியினர் முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திமுக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அவர், போலீஸாரிடம் பேசிக்கொண்டிருந்த வேளையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் எம்.பி., பொ.லிங்கம் முன்னாள் எம்எல்ஏ தி.ராமசாமி ஆகியோர் தலைமையில் மாற்றுப் பாதையில் ரயில் நிலையத்துக்குள் புகுந்தனர்.
 பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய - மாநில அரசுகளை கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக வாரியம் அமைக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 110 பேரை போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.இப்போராட்டத்தால் ராஜபாளையம் ரயில் நிலையம், சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.