சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையை 100 படுக்கை வசதி உள்ளதாக தரம் உயர்த்தப்பட்டு 18 ஆண்டுகளுக்குப் பின்னர், கூடுதல் கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொடக்கத்தில் 50 படுக்கை வசதி உள்ள மருத்துவமனையாக இருந்தது.
பின்னர், கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை 100 படுக்கை வசதி உள்ளதாக தரம் உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு தகுந்தாற்போல், கூடுதல் கட்டடம் கட்டப்படாததால், உள்நோயாளிகளின் பகுதியில் மிகவும் நெருக்கடி இருந்து வருகிறது.
50 உள்நோயாளிகள் இருக்க வேண்டிய இடத்தில், இடைவெளி இல்லாமல் கட்டிலைப்போட்டு 80 படுக்கை அமைக்கப்பட்டன.
இதனால் நோயாளிகளும், அவர்களைப் பார்க்க வருபவர்களும் சிரமப்பட்டனர். மேலும், உள்நோயாளிகள் சாப்பிடும் போது பல இடையூறுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், இம்மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டவேண்டும் என பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் அரசு நிர்வாகத்துக்கு தொடர்ந்து, கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் கூறுகையில், "சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு என்னென்ன வசதிகள் தேவை என உயர் அதிகாரிகள்
மருத்துவமனை நிர்வாகத்தை கேட்டனர்.
அப்போது, தரம் உயர்தப்பட்டும் கூடுதல் கட்டடம் கட்டப்படாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் எனவும், சித்த மருத்துவ பிரிவுக்கும், ஆயுர்வேத மருத்துவ பிரிவுக்கும் தனி கட்டடம் கட்ட வேண்டும் எனவும் கூறினோம்.
இதைத்தொடர்ந்து கூடுதல் கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்

விரைவில் மனம் திறந்து பேசுவேன்: அண்ணாமலை

பாகிஸ்தான்- 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

உத்யோக் பவன் அருகே தீ விபத்து: தொழிலாளா்களின் தற்காலிக குடியிருப்புகள் சேதம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


