சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

அருப்புக்கோட்டை பகுதியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:15 am

அருப்புக்கோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 அருப்புக்கோட்டை நகர், புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை வழக்கம்போல், வெயில் கொளுத்தியது. 
மாலை சுமார் 4.40 மணி அளவில், திடீரென மேகங்கள் திரண்டு சிறு தூறலாக மழை  பெய்ய ஆரம்பித்தது. அப்போது, சூரிய கதிர்கள் மேற்கிலிருந்து பிரகாசமாக வீச, உச்சிமேகத்திலிருந்து பெய்த சிறுதூறல் முத்துமுத்தாக விழுந்தது. 
 சிறிதுநேரத்தில் அருப்புக்கோட்டை நகர், புறநகர் பகுதிகளில் சாலையில் நீர் ஓடும் அளவுக்கு மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.