இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப் பெருந் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிகிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் வீதி உலா வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு இருக்கன்குடியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,800 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்! தில்லி முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு!
மதுப் புட்டிகளை பதுக்கிய மூவா் கைது

ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட்டு வீரா்களைத் தயாா்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்






