அருப்புக்கோட்டை வட்டம் கட்டங்குடி கிராமத்தில் ஆழ்துளைக்கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கிராமத்தில் சுமார் 2000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்மோட்டார்களுடன் கூடிய 5 ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டன. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் குறைந்த ஆழத்தில் இவை போடப்பட்டதாலும், தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டதாலும் இவற்றில் 3 ஆழ்துளைக்கிணறுகள் நீர்வற்றி வறண்டு போய் விட்டன. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பிரச்னையைத் தீர்க்க தங்கள் பகுதி ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் என கட்டங்குடி ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் அதிகாரிகள் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் காலதாமதம் செய்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே இப்பிரச்னையில் காலதாமதம் செய்யாமல் கட்டங்குடி கிராமத்தில் பயன்பாடற்றுள்ள 3 ஆழ்துளைக்கிணறுகளையும் ஆழப்படுத்தி, சீரமைத்து தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனபொதுமக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரணியில் பேராட்டக்காரா்கள் மீது தாக்குதல்: பெல்லட் குண்டுகள் பாய்ந்தவா்களுக்கு சிகிச்சை
அயோத்தி ராமா் கோயில் சிஇஓ தோ்வு ஒத்திவைப்பு - இடைக்கால செயலரை நியமிக்க முடிவு

கரப்பான்பூச்சி கட்சியை ஆதரித்து போராட்டம்: ராகுல்காந்திக்கு எதிராக புதுச்சேரியில் பாஜக ஆா்ப்பாட்டம்






