விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.10) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஹரி பாஸ்கர் தெரிவித்தது:
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 6 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ, பட்டய படிப்பு படித்தவர்கள், பி.இ. (சிவில்) பட்டதாரிகள் மற்றும் தையல் தெரிந்த பெண்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக 30 வயது முதல் 45 வயது முடிய உள்ளவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வாய்ப்பினை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பணிநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் பிற நிறுவனங்களும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம். இம்முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலை உணவு - படுக்கை சட்டத்தை திரும்பப் பெற்ற தில்லி அரசு
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
சிவகாசி அருகே பட்டாசுகள் பதுக்கிய மூவா் கைது
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


