பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி: பேருந்துகள் நிறுத்தம்; மாணவர்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம்-நூர்சாகிப்புரம் இடையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கியதைடுத்து

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள லட்சுமியாபுரம்-நூர்சாகிப்புரம் இடையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கியதைடுத்து இப் பகுதியில் இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, லட்சுமியாபுரம் -நூர்சாகிப்புரம் காமராஜர் நகருக்கு இடையே உள்ள ரயில்வே கடவுப் பாதையை, சுரங்கப் பாதையாக மாற்றும் பணி ஆகஸ்ட் 15  (புதன்கிழமை) முதல் தொடங்கியுள்ளது. 
இதனையடுத்து இவ் வழித்தடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையத்திற்கு பெருமாள்தேவன்பட்டி வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.  இதனால் காமராஜர் நகர், இடைய பொட்டல்பட்டி, காளீஸ்வரி காலனி, அருந்ததியர் காலனி, நூர்சாகிப்புரம், அழகு தெய்வேந்திரபுரம், பால சுப்ரமணியாபுரம், கங்காகுளம், துலுக்கன்குளம், கன்னார் பட்டி, கன்னார்பட்டி காலனி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். 
இதனால் இப்பகுதி மாணவ, மாணவியர் 5 கி.மீ. தூரம் உள்ள வன்னியம்பட்டி விலக்கிற்கு நடந்து சென்று பேருந்துகளில் ஏறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 
காமராஜர் நகர் தார்சாலையிலிருந்து இனாம் கரிசல் குளம் ரயில்வே கடவுப்பாதைக்கு மாற்றுப் பாதை அமைத்தால், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் எளிதாக வழக்கம் போல் இயங்க முடியும். 
 எனவே இப் பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி மாற்றுப்பாதையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.