கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

மதுபான கடையை மூட வலியுறுத்தி அருப்புக்கோட்டை பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

அருப்புக்கோட்டை அரச மரம் பிள்ளையார் கோயில் தெரு அருகே உள்ள மதுபான கடையை மீண்டும் திறக்க  மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

அருப்புக்கோட்டை அரச மரம் பிள்ளையார் கோயில் தெரு அருகே உள்ள மதுபான கடையை மீண்டும் திறக்க  மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில் குமாரியிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-திருச்சுழி செல்லும் சாலையில் அரச மரம் பிள்ளையார் கோயில் உள்ளது. இதன் அருகே சிவன் கோயில், பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளன. இப் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கெனவே இருந்த அரசு மதுபான கடையால் பெண்கள், பள்ளி மாணவிகள் அவ்வழியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அக்கடையை அகற்ற வேண்டும் என தொடர் கோரிக்கை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
  இந்நிலையில், அதே இடத்தில் மீண்டும் மதுபான கடையை திறக்க சிலர் முயற்சி செய்துவருகின்றனர். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இக்கடையை திறக்க முயன்றவர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், சிலர் தாக்கியதில் பெண்கள் காயமடைந்தனர். இப்பகுதியில் அரசு மதுபான கடை திறந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். மேலும், பெண்கள் மற்றும் மாணவிகள் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் மதுபான கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என அதில் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.