நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

செல்லிடப்பேசி எண் கேட்டு தொந்தரவு: பெண் தற்கொலை; ஆட்டோ ஓட்டுநர் கைது

ராஜபாளையம் அருகே செல்லிடப்பேசி எண் கேட்டு தொந்தரவு செய்ததால்  பெண் தற்கொலை செய்து கொண்டது

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ராஜபாளையம் அருகே செல்லிடப்பேசி எண் கேட்டு தொந்தரவு செய்ததால்  பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
    ராஜபாளையம் அருகேயுள்ள கே.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர்  சர்க்கரைத்தாய். திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை  திருமணம் செய்துள்ளார். திருவேங்கடம் செல்வதற்காக அடிக்கடி ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்துக்கு சர்க்கரைத்தாய் செல்வது வழக்கம். அந்த சமயங்களில் ராஜபாளையம் அருகேயுள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான இசக்கிமுத்து சர்க்கரைத்தாயிடம் செல்லிடப்பேசி எண்ணைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறுவதற்காக சென்ற சர்க்கரைத்தாயிடம் மீண்டும் செல்லிடப்பேசி எண்ணை கேட்டு தொந்தரவு செய்ததோடு அவரது கையைப் பிடித்து இசக்கிமுத்து இழுத்தாராம். இதனால் மனமுடைந்த சர்க்கரைத்தாய்  தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரி முருக வள்ளி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இசக்கிமுத்துவை திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.