40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

அருப்புக்கோட்டை நான்குவழிச் சாலை சந்திப்பில் வழிகாட்டிப் பலகை அமைக்கக் கோரிக்கை

மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில்  அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதி சாலை சந்திப்பில் வழிகாட்டிப்

Updated On :25 டிசம்பர் 2018, 6:36 am IST

மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில்  அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதி சாலை சந்திப்பில் வழிகாட்டிப் பலகை அமைக்க வாகன ஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் அருப்புக்கோட்டை நகரின் ராமசாமிபுரம் பகுதியில் சாலை சந்திப்பு உள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே மதுரை, அருப்புக்கோட்டை செல்லும் வழிகளை முறையாகக் குறிப்பிடும்வகையில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அப்பலமாக சேதமடைந்தது. இதனால் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கிச்செல்லும் வாகனங்கள் இச்சாலை சந்திப்பில் வந்து அருப்புக்கோட்டை நகருக்குள் செல்லும் சாலை எது?  மதுரைக்குச் செல்லும் சாலை எது என தெரியாமல் குழப்பமடைகின்றனர். 
இதில் வழி தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் 4 கி.மீ. வரை சுற்றிச் சென்று  அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இச்சந்திப்பு குடியிருப்புகள் இல்லாத ஆளரவமற்ற பகுதி என்பதால் வழிகேட்டுச் செல்லும் சாத்தியமும் இல்லை. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி இப்பகுதியில் வழிகாட்டிப் பலகை அமைக்க சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.