விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மீது அவதூறு பரப்பும் வருவாய் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஊழியர்கள் திங்கள்கிழமை ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் நகராட்சியில் 20 பெண்கள் உள்பட 60 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 தினங்களாக இங்கு பணியாற்றும் பெண்களை, உடன் பணியாற்றும் ஆண்களுடன் இணைத்து உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அவதூறு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.
நகராட்சி ஊழியர்கள் விசாரித்த போது, இங்கு பணியாற்றும் வருவாய் அலுவலர் தனக்கு பிடிக்காத ஊழியர்கள் மீது, தன் உதவியாளர்கள் இருவர் உதவியுடன் அவதூறு கடிதம் எழுதி அனுப்பியது கண்டுபிடிக்கப் பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையர் சரவணன் மூலம் அளித்த புகாரின் பேரில் இதற்கு உடந்தையாக இருந்த காளிமுத்து, அருண்குமார் ஆகிய இருவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் வருவாய் அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, 60 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்திங்கள்கிழமை ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அண்ணாமலை அடுத்து என்ன செய்யப் போகிறார்?

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமையைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


