திருச்சுழி வட்டார விவசாயிகள் நஞ்சில்லா காய்கறி விவசாயம் செய்ய ஆலோசனை
திருச்சுழி வட்டார விவசாயிகள் நஞ்சில்லா காய்கறி விவசாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ம.ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சோ.துரைக்கண்ணம்மாள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


திருச்சுழி வட்டார விவசாயிகள் நஞ்சில்லா காய்கறி விவசாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ம.ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சோ.துரைக்கண்ணம்மாள் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள் செயற்கை உரமிடுதல் மற்றும் செயற்கை பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதால் விளையும் காய்கறிகள் நஞ்சாவதுடன் செலவும் அதிகமாகிறது. மேலும் மண் வளமும் பாதிக்கப்படுகிறது.
இதற்கான தீர்வாக விவசாயிகள் சூரியமின்சக்திப் பொறியைப் பயன்படுத்தி செலவையும் குறைத்து இயற்கையான நஞ்சில்லா காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்க முடியும்.
மேலும் இயற்கை உரப் பயன்பாடு மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்கு செலவில்லா முறையில் கைத்தெளிப்பான்களைப் பயன்படுத்தலாம்.
எனவே இதற்கென மானியத்துடன் கூடிய கருவிகளைப் பெற்றுப்பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதன்படி பயன்படுத்தப்படும் பொருள்களை மானிய விலையில் பெறலாம். சோலார் விளக்குப்பொறியின் (சூரியமின்சக்திப் பொறி) விலை ரூ.4500, இதில் மானியம் ரூ.2000. கைத்தெளிப்பான் பெரியது ரூ2,773. இதில் மானியத் தொகை ரூ.600. கைத்தெளிப்பான் (சிறியது)-ரூ.1300, மானியத் தொகை ரூ.447.
மேலும் பஞ்ச கவ்யா, பூச்சிவிரட்டி, மண்புழு உரம் ஆகியவற்றையும் விவசாயிகள் தேவைப்பட்டால் பெறுவதற்கு வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...