அரசு மனநல பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
விருதுநகரில் புதன்கிழமை இரவு அரசு மன நல பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


விருதுநகரில் புதன்கிழமை இரவு அரசு மன நல பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் என்ஜிஓ காலனி, கம்பர் தெருவை சேர்ந்தவர் இருசப்பன்(38). விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மன நல மருத்துவராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஜனனி (32). இவரும் மன நல மருத்துவர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜனனி, தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கணவர், குழந்தை விருதுநகரில் இருந்ததால் அவர் மட்டும் தினமும் தேனி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை பணிக்கு சென்று வந்த ஜனனி ஓய்வு எடுக்க செல்வதாக கூறி மாடிக்கு சென்றுள்ளார். கணவர் இருசப்பன் நடைபயிற்சிக்காக வெளியில் சென்று விட்டாராம்.
இந்நிலையில் இரவு வெகு நேரமாகியும் ஜனனி கீழே வராததால், மாடிக்கு சென்று இருசப்பன் பார்த்துள்ளார். கதவு பூட்டப்பட்டிருந்தது. மேலும், மனைவியின் செல்லிடபேசிக்கும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
இதுகுறித்து இருசப்பன், விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போலீஸார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, மின் விசிறியில் ஜனனி தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். மேலும், அந்த அறையில் ஜனனி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அதில், தன்னுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை. மனசு சரியில்லை, வாழ பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுத்து விடவும் என எழுதியுள்ளார். ஜனனியின் தந்தை ரகுராமன் மதுரையில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், கடந்த சில நாள்களாக மருத்துவர் ஜனனி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். மேலும், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளார். கணவர், மனைவி இடையே சிறு சிறு பிரச்னைகள் தான் இருந்துள்ளன. ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...